Crime

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 16-வது குறுக்கு தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. 4 மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் இருந்தவர்கள் 1-ம் தேதி அதிகாலையில், புத்தாண்டை கொண்டாடிவிட்டு தூங்கச் சென்றனர்.

அதன்பின், திடீரென சத்தம் கேட்டுள்ளது. உடனே குடியிருப்பு வாசிகள் வீடுகளை விட்டு வெளியில் வந்து பார்த்தபோது அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 மோட்டார் பைக்குகள் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rJLjUlB

Post a Comment

0 Comments