Crime

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர் ஏனாத்தூர் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவன் ஒருவனும், மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் அடிக்கடி காஞ்சிபுரம்-வேலூர் புறவழிச் சாலையில் உள்ள குண்டுகுளம் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் சந்தித்து பேசுவது வழக்கம். அவ்வாறு இவர்கள் சந்திக்கும்போது மது அருந்திய நிலையில் இருவர் இருந்துள்ளனர். இவர்கள் வருவதை பார்த்த அந்த இருவரும் மேலும் 3 பேரை செல்போன் மூலம் வரவழைத்துள்ளனர். கத்தி முனையில்..போதையில் இருந்த இந்த 5 பேரும் சேர்ந்து மாணவனை தாக்கிவிட்டு, அந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1H97twx

Post a Comment

0 Comments