
மும்பை: மும்பையில் சண்டைக் காட்சியைபடம் பிடிப்பதற்காக 60 மாடி இரட்டை கோபுர கட்டிடத்தில் அத்துமீறி நுழைந்த 2 ரஷ்ய யூடியூபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பை டார்டியோ பகுதியில் ‘தி இம்பீரியல்’ என்ற பெயரில் 60 மாடிகள் கொண்ட இரட்டை கோபுர கட்டிடம் உள்ளது. இக்கட்டிடத்தில் சண்டைக் காட்சி படம்பிடிப்பதற்காக 2 ரஷ்ய யூடியூபர்கள் நேற்று முன்தினம் அத்துமீறி நுழைந்துள்ளனர். இருவரும் படிக்கட்டு வழியாக 58-வது மாடி வரை சென்றுள்ளனர். இவர்களை பாதுகாவலர் ஒருவர் கண்காணிப்பு கேமராவில் பார்த்ததை தொடர்ந்து கீழே இறங்கி வந்து வெளியில் குதித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/46FnfPJ
0 Comments