Crime

அரியலூர்: 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரிய லூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அரியலூர் மாவட்டம் கோவி லூர் காலனித் தெருவைச் சேர்ந்த வர் அண்ணாதுரை(57). இவர், கடந்த 28.9.2021 அன்று 8 மற்றும் 4 வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் அண்ணா துரையை அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம்சாட்டப்பட்ட அண்ணாதுரைக்கு 2 சிறுமிகளை பாலியல் வன் கொடுமை செய்ததற்காக தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண் டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ம.ராஜா ஆஜரானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HPSn92U

Post a Comment

0 Comments