Crime

திருப்பத்தூர்: சேலம் மாவட்டம் பன்னாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன குமாரன்(53).இவர், திருப்பத்தூர் ரயில் நிலையம் பிரதான சாலை பீரான் லைன் தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கி திருப்பத்தார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக(கணக்கு) பணியாற்றி வந்தார்.

இந்நிலையில்,கடந்த சனிக்கிழமை மாலை பணி முடிந்து பீரான் லைன் தெருவில் உள்ள வீட்டுக்கு ஓய்வெடுக்க சென்றார். இதனையடுத்து நேற்று காலை ஆட்சியரின் அலுவலகத்துக்கு மோகன குமாரன் வராததால், அவரது செல்போன் எண்ணுக்கு அலுவலக ஊழியர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால், அவர் செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்று பார்த்த போது, மோகன குமாரன் அமர்ந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r1JC3M7

Post a Comment

0 Comments