
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பாக, போதையில் 5 சிறுவர்கள் 2 வியாபாரிகளை தாக்கி, செல்போனை பறித்துச் சென்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த புகாரின்பேரில் தஞ்சாவூர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தஞ்சாவூர் சேவப்பநாயக்கன்வாரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை 3 தினங்களுக்கு முன் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், மற்ற 4 சிறுவர்களை போலீஸார் தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று சீனிவாசபுரம் செக்கடி தெருவைச் சேர்ந்த 16 வயது முதல் 18 வயதுடைய 4 சிறுவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iLaUf0P
0 Comments