Crime

அமராவதி: ஆந்திர மாநிலம், மன்யம் மாவட்டம், சீத்தம்பேட்டா ஏஜென்சி பகுதியில் சவாரா இனத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மே 27-ம் தேதி ரேகுல பாடு என்ற இடத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் சவாரா சிங்கண்ணா என்கிற மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், பத்மாவதி என்ற பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிரச்சினையில் தலையிட்ட பத்மாவதியின் தந்தை கயாவை, சிங்கண்ணா ஒரு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் கயா அதே இடத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது. உடனே ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதில் இரு தரப்பினரையும் விசாரித்த ஊர் பஞ்சாயத்தார், உசிரிகி பாடு கிராமத்தை சேர்ந்த சிங்கண்ணாவை அவரது குடும்பத்தினரே கொல்ல வேண்டும் என்றும் அதுவரை கயாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யக் கூடாது என்றும் தீர்ப்பளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zvb3hNg

Post a Comment

0 Comments