Crime

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கணக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (50). அதிமுகவைச் சேர்ந்த இவர், தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியும், எட்டு வழிச்சாலை திட்டம் குறித்தும் பேசிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து திருமுருகன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியும், பொதுமக்களிடம் கலவரத்தை ஏற்படுத்தி, பொது அமைதியை சீர்குலைத்த குற்றத்திற்காக, பங்களாபுதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஈஸ்வரனை நேற்று மாலை கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JtENL0R

Post a Comment

0 Comments