Crime

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்(33). இவர், தனது உறவினரான மலர்கொடி(45) என்ற பெண்ணின் உதவியுடன், அண்மையில் 30 வயதுடைய ஒரு பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் எனக் கூறி, அப்பெண்ணை செல்வம் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் எஸ்.பி ச.மணி உத்தரவின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று செல்வம், மலர்கொடி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DoyO1k7

Post a Comment

0 Comments