Crime

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள அகரம் பகுதியைச் சேர்ந்தவர் தேசிங்கு (63). குடும்பத்தினரை விட்டு தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 12-12-2019 அன்று அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை தூக்கிச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமி தரப்பில் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேசிங்கை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நீதிபதி எழிலரசி நேற்று தேசிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் ஏதேனும் ஒரு நலத்திட்டத்தின் கீழ் ரூ.1.25 லட்சம் பெற்று 30 நாட்களுக்குள் ஆட்சியர் வழங்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ்.கலாசெல்வி தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dbK9WGe

Post a Comment

0 Comments