
விழுப்புரம், திண்டிவனத்தில் நேற்று முன்தினம் போலீஸார் நடத்திய சோதனையில் 10 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை மாவட்ட போதைபொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து விழுப்புரம் வந்த அரசு பேருந்திலிருந்து இறங்கிய 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். இச்சோதனையில் அவர்கள் 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்திவருவது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் 2 பேரையுல் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aMSq7TAiW
0 Comments