Crime

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெருமாள்கோவில் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9, 10-ம் வகுப்புகளைச் சேர்ந்த 13 மாணவிகளுக்கு 2 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு (40), சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜா(39) ஆகியோர் மீது கடந்த 23-ம் தேதி பரமக்குடி மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்தனர். இதில் ராமராஜா கைது செய்யப்பட்டார். ஆல்பர்ட் வளவன் பாபுவை போலீஸார் தேடி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Jk8hK2

Post a Comment

0 Comments