Crime

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிவசங்கர் பாபா மீது ஏற்கெனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவி மற்றும் பெங்களூருவில் வசிக்கும் மற்றொரு மாணவியின் தாயார் ஆகியோர் கொடுத்த புகார்களின் பேரில், மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (79). இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jzLfEa

Post a Comment

0 Comments