Crime

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் கலப்பட கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,845 வெள்ளை சர்க்கரை மூட்டைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் கலப்பட கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோரது உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பு ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3q1OUvW

Post a Comment

0 Comments