Crime

நாகப்பட்டினம் / மேட்டூர்: ​நாகை அருகே விஜய்யை கண்​டித்து போஸ்​டர் ஒட்​டிய இளைஞர் தூக்​கிட்​டுத் தற்​கொலை செய்து கொண்ட சம்​பவத்​தில், தற்​கொலைக்கு தூண்​டிய​தாக தவெக​வினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக தவெக தலை​வர் விஜய்யை கண்​டித்​தும், அவரை கைது செய்ய வலி​யுறுத்​தி​யும் தமிழகம் முழு​வதும் பல்​வேறு இடங்​களில் போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டன.

இதே​போல, நாகை மாவட்​டம் பிர​தாப​ராமபுரம் கிராமத்​தில் போஸ்​டர் ஒட்​டிய வேளாங்​கண்​ணி​யைச் சேர்ந்த பரத்​ராஜிடம்​(25) தவெக நிர்​வாகி​கள் தகராறில் ஈடு​படும் வீடியோ சமூக வலை​தளத்​தில் பரவியது. பரத்​ராஜ் திமுக உறுப்​பினர் என்​றும், போஸ்​டர் ஒட்​டும் வேலை செய்து வந்​தார் என்​றும் கூறப்​படு​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bUdk0rR

Post a Comment

0 Comments