Crime

சிவகாசி: மது போதை​யில் பள்ளிக்கு வந்​ததைக் கண்​டித்த ஆசிரியரை, 12-ம் வகுப்பு மாணவர்​கள் பாட்​டிலால் தாக்​கிய சம்​பவம் அதிர்ச்சியை ஏற்​படுத்​தியுள்​ளது. மதுரை மாவட்​டம் திரு​மங்​கலத்​தைச் சேர்ந்​தவர் சண்​முகசுந்​தரம்​(47). திருத்​தங்​கல் சி.​ரா. அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் 11, 12-ம் வகுப்​பு​ அரசி​யல் அறி​வியல் துறை ஆசிரிய​ராகப் பணிபுரிந்து வரு​கிறார்.

நேற்று மதி​யம் 11-ம் வகுப்பு மாணவர்​களுக்கு பாடம் நடத்தும் போது, 12-ம் வகுப்பு மாணவர்​கள்சிலர் தாமத​மாக வந்​ததை பார்த்​து, அவர்​களிடம் விசா​ரித்​துள்​ளார். அப்​போது மது வாசனை வந்​த​தால், மாணவர்​களிடம் “மது அருந்தி யுள்​ளீர்​களா?” என்று கேட்​டு, தலைமை ஆசிரியரிடம் வரு​மாறு அழைத்​துள்​ளார். அப்​போது இரு மாணவர்​கள் பையில் வைத்​திருந்த மது பாட்​டிலால் சண்​முகசுந்​த ரத்தை தாக்​கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/59lvQMw

Post a Comment

0 Comments