Crime

சென்னை: ​போதைப் பொருள் பயன்​படுத்​திய வழக்​கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், மற்​றொரு நடிக​ரான கிருஷ்ணா​விட​மும் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். இதுஒரு​புறம் இருக்க கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் சினிமா பிரபலங்​கள் கொண்டு வரப்​பட்​டுள்​ளனர்.

போதைப் பொருள் பயன்​படுத்​திய வழக்​கில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23-ம் தேதி இரவு நுங்​கம்​பாக்​கம் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர், அவர் 10 மணி நேர விசா​ரணைக்கு பிறகு எழும்​பூர் நீதி​மன்ற மாஜிஸ்​திரேட் தயாளன் முன்​னிலை​யில் ஆஜர்​படுத்​தி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதி​மன்ற காவலில் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uFiaPER

Post a Comment

0 Comments