Crime

சென்னை: காதல் விவகாரத்தில் சினிமா உதவி இயக்குநர் கடத்தி தாக்கப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கூலிப்படையை ஏவி தலைமறைவாக இருந்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் சுசீந்திரன். இவரது அலுவலகம் அரும்பாக்கத்தில் உள்ளது. இவரது அலுவலகத்தில் மதுரையைச் சேர்ந்த ராஜகுமரன் என்பவர் பணியாற்றியதோடு, சினிமா உதவி இயக்குநராகவும் இருந்தார். இந்நிலையில் இவரை காரில் வந்த கும்பல் கடந்த 29-ம் தேதி மதியம் அரும்பாக்கத்தில் வைத்து கடத்தியது. பின்னர் அவரை காதலை கைவிடும்படி கூறி ஓடும் காரிலேயே வைத்து சரமாரியாக தாக்கியது. பின்னர், மறைவான இடத்தில் விட்டுவிட்டு தப்பியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uNri9zy

Post a Comment

0 Comments