Crime

தஞ்சாவூர்: சர்க்​கஸ் கூடாரத்​தில் இருந்த ஒட்​டகத்தை திருடியது யார் என்​று, சிசிடிவி கேம​ரா​வில் பதி​வான காட்​சிகளைக் கொண்டு தஞ்​சாவூர் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். 1990-களுக்கு முன்பு வரை சர்க்​கஸ் நிகழ்ச்​சிகளில் சிங்​கம், புலி, யானை, கொரில்​லா, கரடி என பல்​வேறு வகை​யான வன விலங்​கு​கள் பயன்​படுத்​தப்​பட்டு வந்​தன. இவற்​றைப் பார்ப்​ப​தற்​காகவே மக்​கள் குடும்​பத்​துடன் சர்க்​கஸ் நிகழ்ச்​சிகளுக்கு வரு​வார்​கள். சர்க்​கஸ் என்​றாலே திரு​விழா​போல மக்​கள் கூட்​டம் நிரம்பி வழியும்.

பின்​னர் விலங்​கு​கள் துன்​புறுத்​தப்​படு​வ​தாக புகார்​கள் எழுந்​த​தால், நாடு முழு​வதும் சர்க்​கஸ் போன்ற நிகழ்ச்​சிகளில் வன விலங்​கு​கள் பயன்​படுத்த தடை​வி​திக்​கப்​பட்​டது. இதனால் மக்​களுக்கு சர்க்​கஸ் நிகழ்ச்​சிகளுக்​குச் செல்​லும் ஆர்​வம் குறைந்​து, அவற்றுக்கு போதிய வரவேற்பு இல்​லாத நிலை ஏற்​பட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CBHN9cg

Post a Comment

0 Comments