Crime

சென்னை: பெண் தொழில் அதிபர் வீட்டில் தங்க, வைர நகை திருடிய வழக்கில் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை போயஸ் கார்டன், கஸ்தூரி எஸ்டேட் 2-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பெண் தொழில் அதிபர் வனிதா சித்தார்த் (38). இவர், கணவருடன் சேர்ந்து டிஜிட்டல் பயிற்சி அகாடமி நடத்தி வருகிறார்.

பணம், நகைகள் மாயம்: இந்நிலையில், இவர் கடந்த 7-ம் தேதி வீட்டிலுள்ள லாக்கரை திறந்து நகைகளை சரிபார்த்தபோது, சுமார் 24 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைககள், வெள்ளிப் பொருள் மற்றும் ரொக்கம் ரூ.23,500 காணாமல் போனது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WDfkPiE

Post a Comment

0 Comments