Crime

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் மாநிலக்கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேரையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

கடந்த 4-ம் தேதி சென்னை மாநிலக் கல்லூரி - பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே சென்டரல் ரயில் நிலையத்தில் நடந்த மோதலில் மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் படுகாயமடைந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QGTJa3g

Post a Comment

0 Comments