
திருவள்ளூர்: சென்னை, போரூர் சுங்கச்சாவடி அருகே ரேஸ் பைக் மோதி, ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் உயிரிழந்த சம்பவம், போலீஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (53). இவரது மனைவி விஜயலட்சுமி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். குமரன் - விஜயலட்சுமி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள எஸ்ஆர்எம்.(போரூர்) போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரிந்து வந்த குமரன், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர், எஸ்.ஆர்.எம்.சி (போரூர்) காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Pvl4Fws
0 Comments