
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உறைகிணற்றை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் நேருகாலனி ஆனந்தநகரைச் சேர்ந்த கந்தசாமி மகன் கணேசன் (60). இவரது வீட்டில் சுமார் 3 அடி அகலமும், 18 அடி ஆழமும் கொண்ட உறைகிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே செப்டிக் டேங்க் உள்ளது. இதனால் செப்டிக் டேங்கில் உள்ள தண்ணீர் கிணற்றுக்குள் இறங்கி, கிணற்றில் உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசத் தொடங்கி இருக்கிறது. இதனால் அந்த உறைகிணற்றை பயன்படுத்தாமல் மூடி வைத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PaSY24V
0 Comments