
சிவகங்கை: சிவகங்கை அருகே பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய நபர் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது போலீஸார் சுட்டு பிடித்தனர்.
சிவகங்கை அருகே வேளாங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (52). அப்பகுதியில் செங்கல்சூளை நடத்தி வந்த இவர், பாஜககூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். ஜூலை 27-ம் தேதி இரவு அவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jREoz3P
0 Comments