
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பட்டப் பகலில் பெண் காவலரை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணி செய்பவர் டில்லிராணி(33). இவரது கணவர் மேகநாதன். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுதர்ஷினி(7) என்ற மகளும், சந்திரசேகர்(3) என்ற மகனும் உள்ளனர். டில்லிராணி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கிறார். விவாகரத்து செய்வதற்கான நடவடிக்கையும் எடுத்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F4qZAx9
0 Comments