
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தனியார் பேருந்தும் கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி - மதுரை சாலையில் குத்துக்கல்வலசை அருகே இன்று காலையில் தனியார் பேருந்தும் கனிம வளம் ஏற்றி சென்ற லாரியும் அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் பேருந்து கவிழ்ந்தது. விபத்தில் பேருந்தில் இருந்த 3 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JemNgM8
0 Comments