
மதுரை: சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதி ஒரே நாளில் உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் வழிப்பறி வழக்கு ஒன்றில் மதிச்சியம் காவல்துறையினரால் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (வெள்ளிக்கிழமை) காலை உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ozsZTPF
0 Comments