
கோவை: கோவையை தலைமையிடமாகக் கொண்டு மை வி3 ஆட்ஸ் எனப்படும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் தினமும் ரூ.1,000 வரை (முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப) வருவாய் ஈட்டலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதை நம்பிய லட்சக்கணக்கானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் அந்நிறுவனம் பணம் திரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்களிடமிருந்து விதிகளை மீறி முதலீடு திரட்டியது தொடர்பாக தனியார் நிறுவன இயக்குநர் சக்தி ஆனந்தன் மீது மாநகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Or53KQX
0 Comments