
சென்னை: திருவான்மியூரில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கொலை செய்யப்பட் டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் டெல்லிபாபு (37).இவர் சென்னை மாநகராட்சி 14-வதுமண்டலம் 180-வது வார்டுக்கு உட்பட்ட திருவான்மியூரில், மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார்.
நேற்று மதியம் திருவான்மியூர் அவ்வை நகரில் பணிக்காக வழக்கம்போல வாகனத்தை ஓட்டிச் சென்றார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல் வாகனத்தை வழிமறித்து, டெல்லிபாபுவை அரிவாளால் வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GYWx7H5
0 Comments