
சென்னை: கூடா நட்பில் மனைவியே கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, அயனாவரம், தந்தை பெரியார் மெயின் ரோடு பகுதியில் வசித்தவர் பிரேம்குமார் (38). இவர், வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 2-ம் தேதி அதிகாலை அயனாவரம், நியூ ஆவடி சாலை, ஆர்டிஓ அலுவலகம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதி இறந்தார்.
இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விபத்து மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரேம்குமார் விபத்தில் இறக்கவில்லை. அவரது மனைவி சன்பிரியா இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட கூடா நட்பில் கூலிப்படை மூலம் கார் ஏற்றி கணவரை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக கூடா நட்பில் இருந்த அயனாவரம் செட்டித் தெருவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (30) என்பவர் கைது செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lrWPeq5
0 Comments