
சென்னை: சென்னை அயனாவரம், தாகூர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர்அருண் (23). ரவுடியான இவர் மீது 5-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள்உள்ளன. இவர் கடந்த 25-ம் தேதி அயனாவரம் பாளையக்கார தெருவில்நடந்து சென்றபோது, காரில் வந்த 5 பேர் கும்பல் அருணை காரில்கடத்திச் சென்றது. பின்னர், அவர் மீது சரமாரியாக தாக்கி, கத்தியால்வெட்டியது. பின்னர், அவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடம் பார்த்து காரிலிருந்து கீழே தள்ளி விட்டுவிட்டு தப்பியது.
காயம் அடைந்த அருண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், சம்பவம் தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், அருணை கடத்திதாக்கியது ராகுல் (23), யஸ்வந்த் (23), மகேஷ் குமார் (28), ஆலன்ஜோஸ்வா (23), மோகன் (24) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xtEAjwa
0 Comments