Crime

சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியில், தனியார் நிறுவன காவலாளி துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது துப்பாக்கி குண்டு வெடித்து காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அந்த காவலாளி தற்போது நலமுடன் இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல் துறை தரப்பு வெளியிட்ட தகவல்: சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோட்டில் உள்ள ATM-ல் பணம் நிரப்பும் பணி செய்து வரும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு செக்யூரிட்டியாக வேலை செய்து வருபவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராணாசிங் (30). வெள்ளிக்கிழமை காலை மேற்படி சேத்துப்பட்டு முகவரியில் உள்ள நிறுவனத்தில், உரிமம் பெற்ற துப்பாக்கியை (Double Barrel Gun) சுத்தம் செய்யும் போது, தற்செயலாக துப்பாக்கி குண்டு வெடித்து, ராணாசிங்கின் இடுப்பின் வலது பக்கம் பாய்ந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Fqlocu9

Post a Comment

0 Comments