Crime

கடலூர்: விருத்தாசலம் அருகே முன்விரோ தத்தில் 6 பேர் கும்பல் திமுக பிரமுகரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணவா ளநல்லூரைச் சேர்ந்தவர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தியாகராஜன் மகன் இளையராஜா(45). இவர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்.

மேலும் வள்ளலார் குடில் நடத்தி வருகிறார். இயற்கைவிவசாயியான இவர் கொளஞ்சி யப்பர் கோயில் அருகே உள்ள தனது நிலத்துக்கு நேற்று மாலை சென்றார். வயலுக்கு சென்றுவிட்டு, திரும்பும் போது, 6 பேர்கொண்ட கும்பல் இரண்டு துப்பாக்கி யால் இளையராஜாவை நோக்கி சுட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a3xkWNE

Post a Comment

0 Comments