Crime

தாம்பரம்: தாம்பரம் அருகே பழைய பெருங்களத்தூர், காமராஜர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (33). இவர் பாஜக பெருங்களத்தூர் மண்டல எஸ்சி அணி தலைவராக இருந்து வந்தார். பீர்க்கன்காரணை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளியான இவர், தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் காலி இடத்தில் வெட்டு காயங்களுடன் இறந்துகிடந்தார். இதையடுத்து விரைந்து வந்த பீர்க்கங்காரணை போலீஸார் அவரது உடலைமீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர்.

பின்னர் இந்த சம்பவம்தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். கொலையான வெங்கடேசன் எதற்காகஅந்த பகுதிக்கு சென்றார், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இவரை கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பேவீட்டில் வைத்து மர்மகும்பல் வெட்டி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6G0Kf1H

Post a Comment

0 Comments