
சென்னை: சென்னையில் ஓடும் ரயிலில் செல்போனைப் பறிக்க இருவர் முயன்றபோது, தவறி விழுந்து படுகாயமடைந்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அடையாறு இந்திரா நகரில் இருந்து கடந்த ஜூலை 2-ம் தேதி, மின்சார ரயிலில் ப்ரீத்தி என்ற இளம்பெண் பயணித்துள்ளார். அப்போது அவர் கையில் தனது செல்போனை வைத்திருந்தார். திடீரென அவரது செல்போனை இருவர் பறிக்க முயன்றுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத ப்ரீத்தி, அதனை தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ப்ரீத்தி ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aBdFCQp
0 Comments