
சிவகங்கை: சிவகங்கையில் பார்சல் உணவுக்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை கத்தியை காட்டி தாக்கியவர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை தெப்பக்குளம் கரையில் உணவகம் நடத்தி வருபவர் விவேகானந்தன் (45). இவரது உணவகத்துக்கு நேற்றுமுன்தினம் இரவு வந்த 2 பேர் ரூ.400-க்கு அசைவ உணவுகளை பார்சல் வாங்கியுள்ளனர். அவர்களிடம் விவேகானந்தன் பணம் கேட்டுள்ளார். ஆனால் அந்த இருவரும் பணம் தர மறுத்ததோடு, விவேகானந்தனை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sfCVc1U
0 Comments