
கோவை: கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் (25). இவர் 17 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதை அந்த சிறுமியிடம் ரதீஷ் தெரிவித்தபோது அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதைத்தொடர்ந்து, கடந்த 2020 ஜூலை 17-ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு ரதீஷ் வற்புறுத்தினார். அப்போது ரதீஷை அங்கிருந்து செல்லுமாறு சிறுமி கூறியுள்ளார். உடனே ரதீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியை குத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PhiAzxS
0 Comments