
மதுரை: மதுரை மாநகர் பாலரெங்காபுரம் பகுதியில் புற்றுநோய் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, ஏராளமான நோயாளிகள் மதுரை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு சிகிச்சையில் இருந்த திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் புற்றுநோய் தீவிரமடைந்து கடுமையான வலியில் தவித்து வந்துள்ளார். மேலும், தனது குடும்பத்தாரிடமும் மருத்துவர்களிடமும் வலி அதிகமாக இருப்பதக ரவி தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில். இன்று அதிகாலை 4 மணி அளவில், மருத்துவமனைக் கழிப்பறைக்குச் சென்ற ரவி நீண்ட நேரமாக வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்தபோது, தூக்கிட்ட நிலையில் ரவி சடலமாக கிடைந்துள்ளார். இதனையடுத்து, தகவலறிந்து வந்த காவல் துறையினர், ரவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளி தாங்க முடியாத வலியின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Bu3yjH9
0 Comments