Crime

சென்னை: மணலி காவலர் குடியிருப்பில் வசிப்பவர் பிரகாஷ்(35). அயனாவரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி யில் இருந்தபோது, காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, அயனாவரம் பி.இ. கோயில் தெருவில் மது போதையில் தந்தையும், மகனும் சண்டையிட்டு வருவதாக தகவல் தரப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தலைமைக் காவலர் அங்கு சண்டையிட்டுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ்(39), அவரது தந்தை ராஜேந்திரன் இருவரையும் விலக்கிவிட முயன்றார். இதில், கோபம் அடைந்த இருவரும் தலைமைக் காவலரை ஆபாசமாகத் திட்டினர். தேவராஜ் தாக்கியதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NuEcBK

Post a Comment

0 Comments