
சென்னை: சென்னை அமைந்தகரை பகுதியில் செயல்பட்டு வந்த ஆரூத்ரா கோல்டு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தை நம்பி,ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர்,அந்த நிறுவனத்தில் ரூ.2,400 கோடிவரை முதலீடு செய்துள்ளனர். ஆனால், ஆரூத்ரா கோல்டு நிறுவனம் உறுதியளித்தபடி பணம்தரவில்லை.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளித்தனர். இதையடுத்து, ஆரூத்ரா கோல்டு நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் தொடர்புடைய 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0mkrSZI
0 Comments