Crime

புதுடெல்லி: டெல்லியில் இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சனிக்கிழமை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருடன் இணைந்து வாழும் உறவில் இருந்த பெண் மாயமானது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.

இது குறித்து போலீஸ் தரப்பு கூறும்போது, "26 வயதான ஷ்ரத்தா மும்பையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கால் சென்டரில் வேலை பார்த்துவந்தார். அவருக்கும் அஃப்தாப் அமீன் பூனாவாலா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் ஷ்ரத்தா, அஃப்தாப் உறவை இருவீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி டெல்லி சென்றனர். டெல்லியில் மெஹ்ராலி நகரில் வாடகைக்கு வீடெடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MwqWk0I

Post a Comment

0 Comments