
தென்காசி: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜய்குமார் மண்டல் (26). இவரது மனைவி வந்தனாமாஜி (22). இவர்கள் இருவரும் தென்காசி மாவட்டம், கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் தங்கியிருந்து, ராஜபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த வந்தனாமாஜி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வந்தனாமாஜியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட வந்தனாமாஜி ரூ.70 ஆயிரம் வரை பணத்தை இழந்ததாக வும், இதனால் அவரது கணவர் கண்டித் ததையடுத்து மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hta0GmI
0 Comments