Crime

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து பணம், நகையை திருடி விட்டு வீட்டுக்கு தீ வைத்து விட்டு சென்றார்களா? மின்கசிவு காரணமாக தீ பற்றியதா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (73), தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராணி (64). தம்பதியருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவருடன் திருத்தணியில் வசித்து வருகிறார். மகன்கள் இருவரும் அதே பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், ராணி தனது மகளை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் திருத்தணி புறப்பட்டு சென்றார். கந்தசாமி, இரவு காவலர் பணிக்கு புறப்பட்டு சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R5K2UcQ

Post a Comment

0 Comments