
தேனி: பெரியகுளம் அருகே 182 ஏக்கர் அரசு நிலம் பட்டாவாக மாற்றப்பட்ட மோசடி வழக்கில் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் 182 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதற்கான 'அ' பதிவேட்டில் திருத்தம் செய்து வடபுதுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட சில தனிநபர்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டது. இதுகுறித்து 2021-ம் ஆண்டு பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டாட்சியர்கள் ஆனந்தி, ஜெயப்பிரிதா, வட்டாட்சியர்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை வட்டாட்சியர்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீரநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், வடபுதுப்பட்டியைச் சேர்ந்த அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட 14 பேர் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3MrcHWS
0 Comments