
திருப்பூர்: அவிநாசி வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசிகவுண்டன்புதூர் ஆதிதிராவிடர் காலனியில் வசிப்பவர் சந்தியா (27). அதே பகுதியில் வசித்து வருபவர் அருள்குமார் (33). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
அருள்குமார், அவிநாசி காவல் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வந்தார். சந்தியாவுக்கும், அருள்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், கடந்த 26-ம் தேதி வாக்குவாதம் எழுந்தது. இதில் சாதிப்பெயரை சொல்லி காவலர் அருள்குமார் திட்டியுள்ளார். இதில் சந்தியா விஷம் அருந்தி மயக்கமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சந்தியா அனுமதிக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OSqr4Vt
0 Comments