Crime

மானாமதுரை: மானாமதுரையில் திருமணமான 6 மாதங்களில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், அரசு மருத்துவ மனை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இதில் எஸ்ஐ-க்கு காயம் ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முத்து மகள் ஜெபஸ்லீ (23). இவருக்கும் மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலையைச் சேர்ந்த திரவியம் மகன் ஜெகதீஷுக்கும் (26) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் மானாமதுரை பர்மா காலனியில் வசித்து வந்தனர். ஜெகதீஷ் முதுகுளத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WwrVuvQ

Post a Comment

0 Comments