Crime

கவரைப்பேட்டை அடுத்த தண்டலஞ்சேரியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சத்தியவேடு வழியாக செம்மரக் கட்டை மற்றும் கஞ்சா ஆகியவை அதிகளவில் கடத்தி வரப்படுவதால் தண்டலஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வழக்கம்போல போலீஸார் ரோந்து சென்றபோது, அங்கிருந்த டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவர் துளையிடப்பட்டிருப்பதைக் கண்டனர். சந்தேகம் அடைந்த போலீஸார் உள்ளே பார்த்தபோது, கடைக்குள் அமர்ந்து 2 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை வெளியே வரவழைத்து பிடித்து விசாரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pZN4dr9

Post a Comment

0 Comments