Crime

சென்னை: கஞ்சா விற்ற வழக்கில் தேனியைச் சேர்ந்த 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சமூகத்தை சீரழிக்கும் நோயாக மாறிவிட்ட போதைப்பொருளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஜூலை 6-ம் தேதி, சென்னை ஜமீன் பல்லாவரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த பாண்டியன், கதிரேசன், மணிமாறன், தெய்வம் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 56 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிபதி ஜூலியட் புஷ்பா, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாண்டியன் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dkZmEjM

Post a Comment

0 Comments