
கள்ளக்குறிச்சி அருகே நகைக் கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில், புனேவைச் சேர்ந்த 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் 17 கிலோ வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ளது புக்கிரவாரி புதூர் கிராமம். இக்கிராமத்தில் உள்ளது குமரன் சொர்ண மகால் நகைக்கடை. கடந்த மாதம் 8-ம் தேதி இக்கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 281 பவுன் நகை மற்றும் 30 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SNGxdtC
0 Comments