
விருத்தாசலம்: கடலூர் மாவட்டத்தில் 13 வயதுசிறுவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில், 3 வயது சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் சிறுவனையும், அவரது தந்தையையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகேயுள்ள விஜயமாநகரம் புது ஆதண்டார் கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவரது மகள் மலர்விழி (3). இவர், நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டுமுன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, மங்கலம்பேட்டை அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன், அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றதாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yKcSp04
0 Comments